ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

Update: 2023-11-18 07:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சேந்தமங்கலம் கிழக்கு அருகே உள்ள குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மகேஷ்வரன் வயது 39. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு கொண்டுள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமானார். இச்சம்பவம் அறிந்த குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், கரூர் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement

இது தொடர்பான வழக்கு, கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் மகேஸ்வரன் குற்றவாளி என நிருபனமானது. எனவே, சிறுமியை கர்ப்பம் ஆக்கிய மகேஸ்வரனுக்கு 20- வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து மகிழ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த கருர் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நீதிமன்ற காவலர் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பாராட்டினார்.

Tags:    

Similar News