வேலூர் அருகே சீறிப்பாய்ந்த காளைகள்!
வேலூர் மாவட்டம் கீழ்விளாச்சூர் பகுதியில் எருது விடும் விழா - 200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தது
Update: 2024-02-26 15:41 GMT
வேலூர்மாவட்டம், கே வி குப்பம் தாலுக்கா கீழ்விளாச்சூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு 49 ஆம் ஆண்டாக காளை விடும் விழாவானது நடைபெற்றது. முன்னதாக கிராம மக்கள் ஸ்ரீ துர்க்கை அம்மன்க்கு பொங்கலிட்டு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்ட பின்பு எருது விடும் திருவிழா தொடங்கியது. எருது விடும் திருவிழாவில் வேலூர், திருவண்ணாமலை,திருப்பத்தூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது. குறுகிய நேரத்தில் குறிப்பிட்ட இலக்கினை கடந்த காளைகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக 85,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 65,,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 50,000 ரூவாயும் என 78 பரிசுகள் மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன . இந்த காலை விடும் விழாவில் வருவாய் துறையினர், காவல் துறையினர் ,தீயணைப்பு துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மேலும் திரளான சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.