செயற்கை முறையில் பழுக்க வைத்த 200 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

காரிமங்கலத்தில் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மற்றும் கெட்டுப்போன மாம்பழங்கள் 200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2024-05-17 12:49 GMT

செயற்கையாய் பழுக்க வைத்த மாம்பழங்கள் 

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நந்தகோபால்,அடங்கிய குழுவினர் காரிமங்கலம் தினசரி மார்க்கெட்,மாட்லாம்பட்டி, சமத்துவபுரம், பொன்னேரி, கெரகோடள்ளி மற்றும் ,அகரம் பிரிவுரோடு சாலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களான மாம்பழ குடோன்களில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 200 கிலோ அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 4-மொத்த விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் தலா ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். இதை தொடர்ந்து,பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும் எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படியாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே பழங்களைகளை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு அசிட்டலின் போன்ற ரசாயனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. இவ்வாறு செயற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும் குறிப்பாக செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் சாப்பிட்டால் தோல் அலர்ஜி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும்.

ரசாயனமூலம் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் உட்பகுதி காயாக இருக்கும் பழச்சாறு அளவு குறைவாக இருக்கும் பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும் சுவை குறைவாக இருக்கும். மாம்பழ விற்பனை உரிமையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News