2012 ஆண்டிலிருந்து தொடர்ந்து தாக்கப்படும் வழக்கறிஞர் போலீஸ்காவல் கேட்டு மனு
மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரால் தொடர்ந்து தாக்கப்படுதல் குறித்து போலீஸ் பாதுகாப்பு கோரி வழக்கறிஞர் மனு
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாம் மக்கள் இயக்கம் தலைவர் வழக்கறிஞர் சங்கமித்திரன். பட்டியல் இன வகுப்பை சேர்ந்த இவரை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினருமான பவுன்ராஜ் என்பவர் பட்டியலின சமுதாய கூலிப்படையினரைக் கொண்டே 2012முதல் தம்மை கொலை செய்ய பல்வேறு தருணங்களில் முயற்சி செய்ததாகவும் இவர் ஏற்கனவே பலமுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி சங்கமித்திரன் செம்பனார்கோவில் காவல் நிலையம் அருகில் காரில் சென்ற போது தரங்கம்பாடி தாலுகா வல்லம் கிராமத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரகு என்பவர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் சென்று சங்கமித்திரனிடம் பிரச்சனையில் ஈடுபட்டு நீ எல்லாம் எங்க ஜாதிக்கு தலைவனாக முடியாது எங்களுக்கெல்லாம் ஒரே தலைவன் பவுனுதான் , பவுனு பவுனுதான் என்று அதிமுக மாவட்ட செயலாளர் பெயரை சொல்லி அவரை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ரகுவை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தொடர்ச்சியாக கூலிப்படையை வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி செய்து வருவதால் தனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்றும் எனவே தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று சங்கமித்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சக வழக்கறிஞர்களுடன் சென்று போலீஸ் பாதுகாப்பு வேண்டி மனு அளித்தார்