2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - நரிக்குடி அருகே நடைபெற்ற அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் இல்ல விழாவில் மாவட்ட கழகச்

2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - நரிக்குடி அருகே நடைபெற்ற அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் இல்ல விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேச்சு*;

Update: 2025-07-04 11:47 GMT
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - நரிக்குடி அருகே நடைபெற்ற அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் இல்ல விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேச்சு விருதுநகர் கிழக்கு மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி நரிக்குடி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இருஞ்சிறை பகுதியில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமியின் புதல்வி பாண்டீஸ்வரி- பால முருகன் திருமண விழாவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் திருமண விழாவில் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேசுகையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்று அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமையும் போது இந்த திருச்சுழி சட்டமன்றத் தொகுதி வளமும், செல்வமும் பெருகி செழிக்கும் என்று பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் M.S.R.ராஜவர்மன், சுப்பிரமணியன், மணிமேகலை மற்றும் அண்ணா தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் வீரேசன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயபெருமாள் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News