2026-27 ஆண்டுக்குள் டெங்கு நிபா வைரஸ் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை இந்தியன் இம்யூனோ லாஜிகல்ஸ் தடுப்பூசி தயார்ப்பு மேலான்மை இயக்குனர் தகவல்.
2026-27 ஆண்டுக்குள் டெங்கு நிபா வைரஸ் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை இந்தியன் இம்யூனோ லாஜிகல்ஸ் தடுப்பூசி தயார்ப்பு மேலான்மை இயக்குனர் தகவல்..
2026-27 ஆண்டுக்குள் டெங்கு நிபா வைரஸ் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை இந்தியன் இம்யூனோ லாஜிகல்ஸ் தடுப்பூசி தயார்ப்பு மேலான்மை இயக்குனர் தகவல் பொள்ளாச்சி : ஜூலை: 29 ஹைத்ராபாத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் இம்யூனோ லாஜிகல்ஸ் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு 200 மில்லி வீதம் தினமும் பரிசுப் பால் திட்டம் மூலம் இலவசமாக பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் இத்திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அந்நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் மினேஷ் - ஷா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பால் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட தடுப்பூசி நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளிதத பேட்டியின் போது கொரோனோ போன்ற பெருந் தொற்று காலங்களில் தடுப்பூசி தயாரிப்பு பணிகள் போர்க்காடு அடிப்படையில் நடைபெறும் இருப்பினும் தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கு சுமார் ஆறு அல்லது ஏழு வருடங்கள் ஆகும் தடுப்பூசி மனிதர்களுக்கு பாதுகாப்பு என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும் நோய்வாய் பட்டவர்களுக்கு மருந்து கொடுப்பது வழக்கம் ஆனால் தடுப்பூசி என்பது ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கும் செலுத்தப்படும் மருந்து எனவே பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். டெங்கு, நிபாவைரஸ், ஜிகா வைரஸ் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது 2026 -27 ஆம் ஆண்டுகளில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் மத்திய அரசு இதற்கு நிதி உதவி வழங்கி வருவதாக தெரிவித்தார்