காரியாபட்டியில் 21 குண்டுகள் முழங்க காவலரின் உடல் நல்லடக்கம்

காரியாபட்டியில் 21 குண்டுகள் முழங்க காவலரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Update: 2024-03-09 16:27 GMT
காரியாபட்டியில் 21 குண்டுகள் முழங்க காவலரின் உடல் நல்லடக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (29) இவர் விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து தற்போது விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மெய்காப்பாளராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் கருப்பசாமி (29) மற்றும்,

அருப்புக்கோட்டை குலசேகரநல்லூரை சேர்ந்த சரண்யா என்பவருடன் திருமணம் முடிந்து 1 ஆண் குழந்தை உள்ளது. மேலும் மனைவி சரண்யா 4- மாதம் கர்பமாக இருப்பதால் குலசேகரநல்லூரில் உள்ள அவரது அம்மா வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 5 ம் தேதி கருப்பசாமி காரியாபட்டியில் இருந்து குலசேகரநல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று தனது மனைவியை பார்த்து விட்டு,

பின்னர் மீண்டும் அங்கிருந்து விருதுநகருக்கு அருப்புக்கோட்டை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது கடந்த செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில், அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் அருகே எதிரே அதி வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் கருப்பசாமி கீழே விழுந்து,

படுகாயம் அடைந்து சுயநினைவை இழந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கருப்பசாமி மனைவி சரண்யா கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தின் ஓட்டுநர் காளிமுத்து என்பவர் மீது மார்ச் 6 ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கருப்பசாமி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் அபாய கட்டத்தை எட்டிய நிலையில் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருப்பசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகு காரியாபட்டி மயானத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் கருப்பசாமியின் பெற்றோர்களிடம் மாவட்ட எஸ்.பி இறுதிச் சடங்கு செலவிற்காக நிவாரணத் தொகை ரூபாய் 50 ஆயிரத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து

பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த கருப்பசாமியின் உடலுக்கு பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் காவல்துறை மரியாதையுடன் 21-குண்டுகள் முழங்க கருப்பசாமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News