22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் – சின்ன வெண்மணிக்கு புதிய பேருந்து சேவை – செட்டிக்குளம், லப்பைகுடிகாடு உள்ளிட்ட இடங்களுக்கும் புதிய பேருந்து சேவையினை அமைச்சர்

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கின்றார்.;

Update: 2025-03-13 10:02 GMT
பெரம்பலூர் மாவட்டம் பொதுமக்களின் 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் – சின்ன வெண்மணிக்கு புதிய பேருந்து சேவை – செட்டிக்குளம், லப்பைகுடிகாடு உள்ளிட்ட இடங்களுக்கும் புதிய பேருந்து சேவையினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சின்னவெண்மணி கிராமத்திற்கு புதிய பேருந்துடன் வழித்தடத்தை நீட்டிப்பு செய்தும், செட்டிக்குளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு 02 நகர புதிய பேருந்து சேவைகளையும், அரியலூரில் இருந்து நாகல்குழி கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையையும் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று (13.03.2025) தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கின்றார். நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து அண்டை மாநிலங்களும், வெளிநாடுகளும் செயல்படுத்தி வருவது மிகவும் பெருமைக்குரியதாகும். தமிழ்நாட்டுப் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச்செய்யும் உயர்ந்த நோக்கத்தோடு மாண்புமிகு முதலமைச்சர் மகளிருக்கான விடியல் பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள். ஏழை எளிய மக்களின் போக்குவரத்து செலவினை குறைக்கும் வகையில் நமது மாநிலத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றது. அதனடிப்படையில் சின்ன வெண்மணி கிராமத்து மக்களின் நீண்ட நெடிய நாள் கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில், புதிய நகர புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பு செய்து அரியலூர் - திட்டக்குடி வரை செல்லும் வகையிலும், பெரம்பலூர் முதல் செட்டிக்குளம் வரையிலும், பெரம்பலூர் முதல் லப்பைகுடிகாடு வரையிலும், அரியலூர் முதல் நாகல்குழி கிராம் வரையிலும் என மூன்று வழித்தடங்களுக்கும் புதிய பேருந்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். சின்னவெண்மணி கிராமத்தில் புதிய பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களிடம் தெரிவித்ததாவது: சின்னவெண்மணி கிராம மக்களின், குறிப்பாக பெண்களின் 22 ஆண்டுகால கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துசெல்ல முறையான பேருந்து வசதி இல்லாமல் இருந்தோம். இனிமேல் அந்த கவலை இல்லாமல் இருப்போம். அதிலும் பெண்களுக்கு இலவசப் பேருந்து வழங்கியதில் சின்னவெண்மணி,பெரியவெண்மணி கிராமத்து பெண்கள் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், உங்களுக்கும் மனமார்ந்த நன்றி. என தெரவித்தனர். இந்நிகழ்வுகளில் கும்பகோணம் மண்டல போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் இரா.பொன்முடி, ஆட்மா தலைவர்கள் வீ.ஜெகதீசன், இராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், திருச்சி மண்டல போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் முத்துகிருஷ்ணன், கோட்ட மேலாளர் புகழேந்தி ராஜ், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், வட்டாட்சியர்கள் சரவணன் (பெரம்பலூர்), கோவிந்தம்மாள் (குன்னம்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News