22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்
நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்வோம் என்று பொய்க்கூறி ஆட்சி பிடித்த திமுக அரசினால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி;
பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலக சாலையில் கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி ஆணைக்கினங்க பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பாக நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்வோம் என்று பொய்க்கூறி ஆட்சி பிடித்த திமுக அரசினால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா.தமிழ்செல்வன் தலைமையிலும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர்.அருணாச்சலம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவைச்.செழியன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட கழக அவைத்தலைவர் குன்னம்.குணசீலன், மாவட்ட கழக இணைச் செயலாளர் ராணி, மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கே.ரெங்கநாதன், மாவட்ட அணி செயலாளர்கள் எம்.என்.ராஜாராம்,முத்தமிழ் செல்வன்,சந்திரகாசன்,காவியா ரவி,ஏ.கே.அசோகன்,செந்தில் ராஜன், திருமால்மருகன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கே.கர்ணன், சிவப்பிரகாசம்,உதயம்.ரமேஷ், ரவிச்சந்திரன்,செல்வமணி, சசிகுமார்,ஏ.கே.ராஜேந்திரன்,யு.அழகுதுரை,ராமராஜ் பேரூர் கழக செயலாளர்கள் செந்தில்குமார், விவேகானந்தன்,ஆறுமுகம், முகமது இலியாஸ் மற்றும் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், ஒன்றிய,நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.