பறக்கும் படை சோதனையில் 23 கிலோ தங்கம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை சோதனையில் 23 கிலோ தங்கம் பறிமுதல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

Update: 2024-03-27 10:26 GMT

 தங்கம் பறிமுதல்

தர்மபுரி மாவட்டத்தில் 10 சோதனை சாவடிகள், 45 பறக்கும் படை மற்றும் 45 நிலையான குழுக்கள் மூலம் வாகன சோதனை நடக்கிறது. இதில் தொப்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற பொலிரோ ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 23 கிலோ தங்கம் இருந்தது. மேலும், கர்நாடக மாநிலம் சிக்பெலாபூரை சேர்ந்த டிரைவர் ரஞ்சித் (23) விஜயகுமார் (33 )மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸசெக்யூரிட்டி விஜய் சிங்,( 40 )ஆகியோர் இருந்தனர். மேலும் தங்கம் சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் நகைகளாக செய்து இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 23 கிலோ தங்கம் நகைகள் ஒப்படைக்கப்பட்டது இதன் மதிப்பு 2.61 கோடி ஆகும் மேற்படி கைப்பற்றப்பட்ட பொருட்களை தருமபுரி சட்ட மன்றத் தொகுதியின் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆய்வு செய்தார்கள்.
Tags:    

Similar News