236 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்!
பொன்னமராவதி பகுதியில் 236 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்.
Update: 2024-04-05 04:54 GMT
பொன்னமராவதி பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன். தலைமைக்காவலர்கள் சார்லஸ், சின்னத்துரை ஆகியோர் கொண்ட தனிப்படையினர். தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெள் ளையாண்டிபட்டியில் ஒரு கிடங்கில் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட் டிருந்தது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.2 லட்சத்து 68ஆயிரத்து 520 மதிப்புள்ள 236 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கிடங்கு உரிமை யாளர் பூலாங்குறிச்சியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (32) என்பவரை கைது செய்தனர்.