மெகா தூய்மை பணியில் ஒரேநாளில் 242டன் குப்பைகள் அகற்றம்
மயிலாடுதுறை நகராட்சியில் மெகா தூய்மைப் பணியில் ஒரேநாளில் 242 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன. 1500 நபர்களுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து வழங்க பச்சை நிற நீலநிற கூடைகள் வழங்கப்பட்ணது;
Update: 2024-02-25 10:19 GMT
'கிளீன் மயிலாடுதுறை: கிரீன் மயிலாடுதுறை"
மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டுகளிலும் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து நடத்திய 'கிளீன் மயிலாடுதுறை: கிரீன் மயிலாடுதுறை" என்ற சிறப்பு மெகா தூய்மைப்பணி நடைபெற்றது. 84 இடங்களில் நடைபெற்ற பணியில் 15 ஜேசிபி இயந்திரங்கள், 53 டிராக்டர்களுடன் 225 தூய்மைப் பணியாளர்கள்; மற்றும் தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மெகா தூய்மைப் பணியில் இன்று ஒரேநாளில் 242 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு, ஆனந்ததாண்டபுரத்தில் உள்ள கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் 3 வார்டுகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் 1500 பேருக்கு மக்கும் குப்பை, மக்காக்குப்பைகளை பிரித்து வழங்குவதற்கு பச்சை மற்றும் நீலநிறக் கூடைகளை வழங்கி தொடக்கி வைத்தனர். தொடர்ந்து, நகராட்சியின் 36 வார்டு மக்களுக்கும் இந்த கூடைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில், சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் மதியழகன், நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.