ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2024-03-22 08:14 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் - மதுரை மாவட்ட எல்லையான அழகாபுரி சோதனை சாவடியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்ட சென்ற ரூ.2.47 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் அலுவலர் கணேசனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.