இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 267 வது குருபூஜை விழா !

கரூரில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 267 வது குருபூஜை விழா நடைபெற்றது.

Update: 2024-07-11 12:01 GMT

 குருபூஜை விழா

கரூரில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 267 வது குருபூஜை விழா நடைபெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் இன்று. மன்னிப்பு கேட்டால் உயிர் பிச்சை தருவதாக ஆங்கிலேயர்கள் தெரிவித்த போது, அடிமைப்பட்டு உயிர் வாழ்வது விட சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம் என்று கம்பீரமாக முழக்கமிட்டவர் வீரன் அழகு முத்துக்கோன் என்பது வரலாறு.

அவரை தெய்வமாக வணங்கும் யாதவ சமுதாயம் சார்பில் இன்று தமிழக முழுவதும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு, தமிழ்நாடு யாதவர் மகா சபை கரூர் மாவட்ட தலைவர் வேணுகோபால் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் பழம் உடைத்து அவருக்கு ஆராதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பொன்ராஜ், பொருளாளர் நாகராஜன் மற்றும் முத்துக்குமார், நண்பன் பாலாஜி, ஸ்வீட் கடை பாலு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரரின் நினைவுகளை போற்றினர்.

Tags:    

Similar News