28 படுக்கைகள் கொண்ட பிரத்யேக தனி வார்டு ஏற்பாடு
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்குநோய் பாதித்தவர்களுக்கு சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Update: 2024-05-17 12:35 GMT
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்குநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 28 படுக்கைகள் கொண்ட பிரத்யேக தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இதுவரை யாரும் அறிகுறி இல்லை. சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் டெங்கு யாருக்கும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.