ஜன.29ல் தெப்பத்திருவிழா கொடியேற்றம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வரும் ஜனவரி 29 ல் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் தெப்பத் திருவிழாவிற்கு வரும் ஜன.29 ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா வரும் பிப்.07 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.