3 பாராளுமன்ற தொகுதிகளின் கிராம காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு ஆய்வு கூட்டம்
கூட்டம்;
தேனியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மண்டல எண் 8-ன் சார்பில் திண்டுக்கல், கரூர், தேனி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளின் கிராம காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு ஆய்வு கூட்டம் தேனி தெய்வா ஹோட்டலில் 28.2.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில மேலாண்மை துணை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, தேனி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் பாண்டியன், திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பேங்க் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.