3-லட்சம் பேர் வரை பங்கேற்கும் முப்பெரும் விழா திமுகவிற்கு திருப்புமுனையாக அமையும்- அமைச்சர் முத்துசாமி கரூரில் பேட்டி.

3-லட்சம் பேர் வரை பங்கேற்கும் முப்பெரும் விழா திமுகவிற்கு திருப்புமுனையாக அமையும்- அமைச்சர் முத்துசாமி கரூரில் பேட்டி.;

Update: 2025-09-13 11:41 GMT
3-லட்சம் பேர் வரை பங்கேற்கும் முப்பெரும் விழா திமுகவிற்கு திருப்புமுனையாக அமையும்- அமைச்சர் முத்துசாமி கரூரில் பேட்டி. கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறும் இடத்தில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது இந்த முப்பெரும் விழாவிற்கு ஈரோட்டு மாவட்டத்தில் இருந்து திமுகவினர் பெருமளவில் வந்து பங்கேற்பார்கள். இங்கு நடைபெறுகின்ற பணிகளை பார்வையிடுவதன் மூலம் எதிர்காலத்தில் ஈரோட்டில் இதே போன்ற விழா நடத்த ஏதுவாக இருக்கும் என பார்வையிட வந்ததாக தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் மூன்று லட்சம் பேர் வரை பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ள சூழலில் இதற்காக அமைக்கப்படும் கட்டமைப்புகள் மிகப்பிரமாண்டமாகவும் பாதுகாப்பானதாகவும் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது சிறப்பாகும் என்று கூறிய அவர் ஒரு லட்சம் பேர் வரை அமர்வதற்கு நாற்காலிகள் போடப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை நடந்திராத அளவிற்கு இந்த முப்பெரும் விழா அமையும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்த அவர் இந்த முப்பெரும் விழா திமுகவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என தெரிவித்தார். .

Similar News