3 நாட்கள் இலவச செஸ் பயிற்சி

ஒட்டன்சத்திரம் கான்பிடென்ட் செஸ் அகாடமி சார்பில் மாணவர்களுக்கு இலவச செஸ் பயிற்சி நடைபெறுகிறது

Update: 2023-12-25 09:28 GMT

3 நாட்கள் இலவச செஸ் பயிற்சி

ஒட்டன்சத்திரம் கான்பிடென்ட் செஸ் அகாடமி சார்பில் இந்த பகுதிகளைச் சேர்ந்த 6 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் டிச. 27 வரை 3 நாட்கள் இலவச செஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான வழிமுறைகள்,விதிமுறைகள் கற்றுத் தரப்படுகிறது. பங்கேற்க விரும்புவோர் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் எதிரில் உள்ள கான்பிடென்ட் செஸ் அகாடமிக்கு இன்று காலை 10:00 மணிக்குள் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு அதன் செயலாளர் சண்முககுமாரை 9787866583 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Tags:    

Similar News