கலசபாக்கத்தில் 3 மேம்பால பணிகள் விரைவில் துவக்கம் - எம்.எல்.ஏ ஆய்வு

Update: 2023-11-21 06:42 GMT

எம்.எல்.ஏ ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பூண்டி ஊராட்சியில் தாளை கலசபாக்கம் பகுதியில் உள்ள செய்யாற்றின் குறுக்கே 3 மேம்பாலங்கள் ரூ 48 கோடியில் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொடங்கி வைக்க வருவதை முன்னிட்டு முன்னேற்பாடுகளை பெ.சு. தி.சரவணன், எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது. கலசபாக்கம் பகுதியில் உள்ள செய்யாற்றின் குறுக்கே 3 மேம்பாலங்கள் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் நீண்ட நான் கோரிக்கையாக வைத்து வந்தனர். அதை திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டு காலத்தில் மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு, தீவிர கவனம் செலுத்தி நமது மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் செய்யாற்றின் குறுக்கே 3 மேம்பாலங்கள் கட்டாயம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக முழுமூச்சாக செயல்பட்டு நமது தொகுதிக்காக பெற்றுக் கொடுத்தனர். அவர்களுடன் இந்த மேம்பாலம் அமைப்பதற்கு நானும் மேம்பாலம் கட்டாயம் அமைத்து கொடுத்தாகவேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வந்தேன்.முதலமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சரும் இந்த மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து இந்த பணியை துவங்குவதற்கு அரசாணையும் வெளியிட்டு அந்த பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க வருகிறார் . இந்த மேம்பாலம் நம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் இந்த மேம்பாலம் கலசபாக்கம் தொகுதி மக்களுக்கு கிடைத்த ஒரு வெற்றி அதனால் முதலமைச்சருக்கும் பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் நாம் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்க வருகை தரும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சிறப்பான முறையில் நாம் அனைவரும் வரவேற்பளிக்க வேண்டும்/ அனைத்து அடிப்படை வசதிகளும் அதேபோல் முன்னேற்பாடுகளும் சிறப்பான முறையில் இருக்க வேண்டும் அதற்காக நாம் அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். ஆய்வின் போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவருமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், நகர செயலாளர் செளந்தாராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சாண்டி, மஞ்சுளா சுதாகர், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்

Tags:    

Similar News