செய்யாற்றின் குறுக்கே 3 மேம்பாலங்கள் - எம்பி,எம்.எல்.ஏ ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் செல்கின்ற செய்யாற்றின் குறுக்கே காஞ்சியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலமும் அதோடு கலசபாக்கத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டது. இந்த இரண்டு மேம்பாலங்களும் சுமார் 60 கி.மீ.தூரம் உள்ளது. எனவே மழைக்காலங்களில் செய்யாற்றில் வெள்ளம் செல்லும்போது கரையோர மக்கள் 60 கி.மீ. மீட்டர் தூரத்தை சுற்றி செல்லும் நிலை இருந்தது. மேலும் கலசபாக்கம் தொகுதியில் தென்மாதிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பருவதமலை பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்த பருவதமலை மலைக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் இவர்கள் வந்து செல்வதற்கும் பாலம் ஒரு தடையாக இருந்து வந்தது. இந்நிலையில் இதற்கு முன்பு இருந்த அதிமுக அரசு தேர்தலின்போது மேம்பாலம் கட்டி தரப்படும் என வாக்குறுதிகள் கொடுத்துச் சென்ற நிலையில், கடந்த 10 ஆண்டு காலங்களில் யாரும் பாலம் கட்டுவதற்கு முன் வரவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டு கடந்த நிலையில் செய்யாற்றின் குறுக்கே 3 இடங்களில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த மாதம் டெண்டர் விடும் பணிகள் முடிந்தது. பின்னர் பாலம் அமைய உள்ள 3 இடங்களிலும் முதற்கட்ட ஆய்வுகள் நடந்துமுடிந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் சி.என். அண்ணாதுரை, எம்பி பெ.சு. தி.சரவணன், எம்எல்ஏ ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அ.சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் க.சுப்பிரமணியன், ஆகியோர் பழங்கோயில் அருகே செய்யாற்றில் அடுத்த வாரம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெறும் மேம்பாலம் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சி.என்.அண்ணாதுரை, எம்பி, பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ ஆகியோர் கூறியதவாது, இந்த செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவது என்பது பல ஆண்டு கோரிக்கை என்பதைவிட தொகுதி மக்களின் கனவாகும். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நிறைவேற்றி உள்ளனர். அடுத்த வாரம் பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.