அதிமுக வேட்பாளருக்கு "இன்ப அதிர்ச்சி" கொடுத்த பாஜக வேட்பாளர் !

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 3 கட்சி வேட்பாளர்களும், வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-26 08:55 GMT

அதிமுக வேட்பாளருக்கு "இன்ப அதிர்ச்சி" கொடுத்த பாஜக வேட்பாளர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 3 கட்சி வேட்பாளர்களும், வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, கை குலுக்கி பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி இருவரும் கைகுலுக்கி உரையாடினர். மேலும், அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணியை கட்டியணைத்து பேசினார் பாஜக வேட்பாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம். சில மாதங்களுக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், தற்போது அதிமுக - பாஜக இடையே லோக்சபா தேர்தல் களத்தில் உக்கிரமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், நாமக்கல் லோக்சபா தொகுதியில் அதிமுக - பாஜக வேட்பாளர்கள் கட்டித்தழுவிப் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்ட பாஜகவும், அதிமுகவும் இப்போது தனித்தனியாக போட்டியிட்டாலும், பழைய நண்பர்கள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக்கொண்டது கட்சித் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R. ஈஸ்வரன் மற்றும் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P. சின்ராஜ் ஆகியோர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் நாமக்கல் தொகுதி வேட்பாளர் ராகா தமிழ்மணி ஆகியோரிடம் ஒரே அறையில் பேசி கொண்டிருந்தனர்.
Tags:    

Similar News