திருப்பூரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது!

திருப்பூரில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-29 12:53 GMT

கோப்பு படம்

திருப்பூர் திலகர் நகர் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது! திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர்நகர் பகுதியில் 15 வேலம்பாளையம் போலிசார் ரோந்து வந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல் (வயது 22) அமித்குமார்(22) என்பது தெரியவந்தது.மேலும் அவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தை அடுத்த சக்தி தியேட்டர் ரோடு பகுதியில் அனுப்பர்பாளையம் போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த சிவபாலன் (28) என்பதும், அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலிசார் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

Similar News