ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை
Update: 2023-12-19 01:47 GMT
அன்னபூரணி,ராதாகிருஷ்ணன், சந்தோஷ்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காடியார் கிராமத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்திற்கு மருந்து அடித்து விட்டு வருவதற்காக சென்ற மூன்று பேர் உடல் சடலமாக மீட்கப்பட்டனர். அதே கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) அன்னபூரணி (45) சந்தோஷ் (30) ஆகிய சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இவர்கள் மூன்று பேரையும் கடந்த மூன்று நாட்களாக உறவினர்கள் தேடி வந்த நிலையில் தற்பொழுது அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டனர் . சம்பவ இடத்தில் திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.