பச்சை கிளிகளை வலை வைத்து பிடித்த 3 பேர் கைது !
கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டை பகுதியில் பச்சை கிளிகளை வலை வைத்து பிடித்த 3 பேர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-29 06:30 GMT
கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டை பகுதியில் வயல் வெளிகளில் பச்சை கிளிகளை வலை வைத்து பிடிக்கப்படுவதாக மாவட்ட வன அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட உதவி வன பாதுகாவலர் சிவகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த மயில் முத்து என்கிற மைக்கேல் ராஜ் (21)மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து வியாபார நோக்கத்திற்காக 13 பச்சை கிளிகளை வலை விரித்து பிடித்து வைத்திருந்தது கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, நாகர்கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.பச்சை கிளிகளை பிடிப்பது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாதலால் அவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் விதம் மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட வன அதிகாரி உத்தரவிட்டார். இதன் பின்னர் பச்சை கிளிகள் அனைத்தும் பொய்கை அணைப்பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது.