வீடு புகுந்து தாக்குதல் நடத்தியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.

வேர்கிளம்பி அருகே வீடு புகுந்து தாக்குதல் நடத்தியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-06-28 04:14 GMT

 பத்மநாபபுரம் நீதிமன்றம் 

வேர்க்கிளம்பி அருகே உள்ள உடையார்விளை கண்ணனூரை சேர்ந்தவர் செல்லக்கண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலஸ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு செல்லக்கண் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் வீட்டில் இருக்கும் போது பாலஸ் மற்றும் அவரது தந்தை ராஜையன் ஆகியோர் செல்லக் கண், செல்வி அகியோரை கொடூரமாக தாக்கியதில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதுதொடர்பாக அளித்தபுகாரின் பேரில் திருவட்டார்போலீசார் பாலஸ், அவரது தந்தை ராஜையன் மீதுவழக்குபதிவுசெய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை பத்மநாபபுரம் குற்றவியல் நீதிமன்றம் எண். 2ல் நடைபெற்றது. இதனிடையே ராஜையன் இறந்து விட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பிரவின் ஜீவா, பாலஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்ட னையும், 2 ஆயிரம் அபராதமும் வதித்தார். அரசு தரப்பில் அரசு உதவிவழக்கறிஞர் ரேவதி ஆஜரானார்

Tags:    

Similar News