இரயுமன்துறையில் ரூ.30 கோடியில் தூண்டில் வளைவு. 

இரயுமன்துறையில் ரூ.30 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட உள்ளது.

Update: 2023-11-24 16:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.    

 கூட்டத்தில் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு சார்பில்  மீனவ பெண்கள் கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில், ஓமன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கோவளம் மீனவர்கள் உட்பட 17 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.     

 பின்னர் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.  இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், மானிய விலை மண்எண்ணை விண்ணப்பித்த மீனவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

இரயுமன்துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.30 கோடியும் துறைமுகத்தை தூர்வார ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News