30 லட்சம் மதிப்பில் மேநீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டினார் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.
ஆரணி, ஆக 24. ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் ரூ 30 லட்சம் மதிப்பில் மேநீர் தேக்க தொட்டி அமைக்க ஆரணி எம்.எல்.ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தில் மேநீர் தேக்க தொட்டி அமைத்து தரும்படி அப்பகுதியினர் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்து சென்றதின் பேரில் நபார்டு வங்கியின் நிதியின் கீழ் ரூ.30லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேநீர் தேக்க தொட்டி அமைக்க உத்தரவானது. இதற்கான பணிகள் துவக்க நிகழ்ச்சியில் எம்எல்ஏ பங்கேற்று மேநீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டினார். நிகழச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஊராட்சித் தலைவர் ஆர்.அசோக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞர் க.சங்கர், நகர செயலாளர் அசோக்குமார், ஆரணி நகர மன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.மோகன், கே.குமரன், ஒப்பந்ததாரர் பழனி ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.