இருவேறு இடங்களில் வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில், ஒரே நாளில் ஆசிரியை, தபால் ஊழியர் வீடுகளின் கதவை உடைத்து நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2023-12-17 02:24 GMT
திருட்டு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி கே.எம்.ஏ உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (46). இவர் பொய்யுண்டார்கோட்டையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிச்சியடைந்தார்.  உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

 இதே போல் தஞ்சாவூர் விளார்ரோடு நியூபாத்திமா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுமதி (46). இவர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டைப் பூட்டி விட்டு வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்தும் மகேஸ்வரி, கோமதி ஆகியோர் தனித் தனியாக அளித்த புகார்களின் பேரில் தமிழ்பல்கலைக் கழகம் மற்றும் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News