32 டன் ஆவணம் இல்லாத நெல் விதைகள் விற்க தடை
காஞ்சிபுரத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் சோதனை செய்த, விதை ஆய்வு அதிகாரிகள், அரசால் அறிவிக்கப்படாத முறையான ஆவணங்கள் இல்லாத 32 டன் நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்தனர்;
சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகளை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளடக்கிய சென்னை மண்டல விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா தலைமையில், துணை இயக்குநர் வானதி, ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர் காஞ்சிபுரத்தில் உள்ள விதை விற்பனை செய்யும் கடைகளில் சோதனை செய்தனர். ஆய்வின்போது, அரசால் அறிவிக்கப்படாத மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 32 டன் நெல் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15 லட்சமாகும். மேலும், சேமிப்பு முறை, சுகாதாரமாக இல்லாத விதை நெல் விற்பனை நிலையத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.