33 வார்டுகளில், அக். 29ல்,்வார்டு சிறப்பு கூட்டம்

குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வார்டுகளில், அக். 29ல், வார்டு சிறப்பு கூட்டம்;

Update: 2025-10-26 13:45 GMT
குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வார்டுகளில், அக். 29ல், வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வார்டுகளில், அக். 29ல், புதன்கிழமை அந்தந்த பகுதி நகரமன்ற உறுப்பினர் தலைமையில், வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளான குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு ஆகியவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கூட்டத்தில் கூறலாம். வார்டு பொதுமக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News