மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி பெற்ற 351 பேர் போட்டி தேர்வுகளில் வெற்றி !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.;

Update: 2024-06-11 10:14 GMT

கலெக்டர் பிருந்தாதேவி

சேலம் கோரிமேடு பகுதியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:- கடந்த 3 ஆண்டுகளில் தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்ட 12 விதமான போட்டி தேர்வுகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகளில் படித்த 1,574 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

அவர்களில் 351 பேர் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 222 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் உதவித்தொகையும், 38 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 12 ஆயிரத்து 307 பேருக்கு பணி வாய்ப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன.

இலவச பயிற்சி வகுப்புகளில் பாடவாரியான மாதிரி தேர்வுகளும், பயிற்சி நிறைவு பெற்றவுடன் முழு வடிவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. எழுத்து தேர்வில் வெற்றி பெற்று நேர்முக தேர்விற்கு செல்பவர்களுக்கு மாதிரி நேர்முக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News