4 வயது சிறுவனின் திறமை.
மதுரை திருப்பரங்குன்றத்தில் 4 வயது சிறுவனின் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்;
மதுரை திருப்பரங்குன்றம் கோட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி- ஆதீஸ்வரி தம்பதியினர் இவர்களுக்கு நான்கு வயதில் சஷ்டிதரன் என்கிற மகன் இருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வரும் சஷ்டிதரன். மூன்று வயது வரை சரியாக பேச்சுத் திறன் இல்லாமல் இருந்துள்ளார். அதன் பிறகு பேசி பழகி படிப்பில் உள்ள ஆர்வத்தின் காரணமாக பாடங்களைக் கடந்து பொது அறிவில் ஆர்வம் செலுத்தியுள்ளார். இந்த நிலையில் தேசிய சின்னங்கள்; சூரிய குடும்பம்: கண்டுபிடிப்பு & கண்டுபிடிப்பாளர்கள்; நாடுகளின் நாணயம்; மாநிலங்கள் மற்றும் மொழிகள் என 200க்கும் மேற்பட்ட பொதுஅறிவு கேள்விகளை எட்டு நிமிடம் 49 நொடிகளில் சொல்லில் சர்வதேச புக் ஆப் பிரகாஷ் மற்றும் நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என இரண்டிலும் அங்கீகாரம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் 60 தமிழ் ஆண்டுகளை 33 நொடிகளில் சொல்லி இந்தியன் புக் ஆப் ரெக்காட்சில் இடம்பெற்று அசத்தியுள்ளார். *இது குறித்து சஷ்டிதரன் தாய் ஆதீஸ்வரி கூறுகையில்: சஷ்டிதரன் மூன்று வயது வரை பேச்சு வராமல் தாமதமாக தான் பேசத் துவங்கினான் அருகில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். அவன் ஆர்வம் மற்றும் அவனது சொந்த முயற்சியின் காரணமாக நான்கு வயதிலேயே இரண்டு சாதனைகளை படைத்துள்ளான் இதற்கு அவனுக்கு அவன் பள்ளி ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது அபாகஸ் பயிற்சி பெற்று வருகிறான் அதிலும் உலக அளவில் சாதனை படைப்பான் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.