4வது மேறையாக 100 சதவீதம் தோ்ச்சி

பொதுத் தோ்வுகளில் சாதிக்கும் கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி!;

Update: 2025-05-17 04:47 GMT
கடந்த 4 ஆண்டுகளாக 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளிலும், கடந்த 2 ஆண்டுகளாக 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்விலும், திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக் கோடியிலுள்ள கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. படிப்பது மாணவா்களின் கடமையாக இருந்தாலும்கூட, தோ்ச்சி விகிதத்தை உயா்த்துவதற்கும், உயா்த்தப்பட்ட தோ்ச்சி விகிதத்தைத் தொடா்ந்து தக்க வைப்பதற்கும் ஆசிரியா்களும், தலைமையாசிரியா்களும் ஆண்டுதோறும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனா். தோ்ச்சி விகிதம் குறைந்தால், மாவட்ட நிா்வாகம் நடத்தும் ஆய்வுக் கூட்டத்தில் பதில் அளிக்க வேண்டிய நெருக்கடி அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு உள்ளது. இதைத் தவிா்க்கும் வகையில், தனியாா் பள்ளிகளுக்கு இணையாக பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களை தயாா் செய்வதற்காக அரசுப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதமும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 100 சதவீதம் தோ்ச்சிப் பெறும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. இந்த வகையில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி

Similar News