4 பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரம் கொள்ளை

வேடசந்துார் அருகே பட்டப்பகலிலேயே வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரம் கொள்ளை;

Update: 2025-06-18 08:00 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே வாங்கலாபுரத்தைச் சேர்ந்த இளங்கோபாண்டியன் (37)இவரது மனைவி மாசிலாமணி, இளங்கோபாண்டியன் வேலைக்கு சென்ற நிலையில் மாசிலாமணி ரேஷன் கடைக்கு உணவுப்பொருட்கள் வாங்க சென்றார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி மர்மநபர் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மர்ம நபர் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூம்பூர் காவல் நிலைய போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News