எக்சாஸ்ட் பேன் திருடிய 4 பேர் கைது
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஒரகடத்தில் வேலை செய்யும் நிறுவனத்தின் எக்சாஸ்ட் பேன்களை திருடி விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-01-08 03:30 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஒரகடத்தில், போலீசார் நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், சந்தேகத்திற்கு இடமாக, கார் மற்றும் கனரக வாகனங்களுடன் நின்றிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 'எக்சாஸ்ட் பேனை' திருடி காரில் ஏற்றியது தெரிந்தது. விசாரணையில், ஒரகடத்தில் உள்ள பிரபல தனியார் பேருந்து உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருவதும், நேற்று முன்தினம் அந்நிறுவனத்தில் இருந்து மற்றொரு தொழிற்சாலைக்கு 100 எக்சாஸ்ட் பேனை கன்டெய்னர்லாரியில் எடுத்து சென்றுள்ளனர். அப்போது, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் நிறுத்தி, 40 'எக்சாஸ்ட் பேனை' மற்றொரு காரில் ஏற்றி, வெளியில் விற்பனை செய்ய இருந்தது தெரிந்தது. இதையடுத்து, வாலாஜாபாதை சேர்ந்த கம்மாரதீன், 29, காவனிப்பாக்கத்தை சேர்ந்த தேவன், 23, ஆசூர் கொளத்துாரை சேர்ந்த ரவிவர்மா, 21, பழையசீவரத்தை சேர்ந்த புருஷோத்தமன், 21, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்."