40 பேர் பயணம் செய்த அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து 4 பேர் படுகாயம்

சங்ககிரி: அரசு பேருந்து மீது கிரேன் லாரி மோதி 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் படுகாயம்....

Update: 2024-07-31 09:41 GMT
சங்ககிரி அருகே அரசு பேருந்து மீது கிரேன் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயம் அரசு மருத்துவமனையில் அனுமதி... அரசு பேருந்து மீது கிரேன் லாரி மோதி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது... சேலம் மாவட்டம் சங்ககிரி சேர்ந்த வீரப்பன் (58). இவர் சங்ககிரி அரசு பணிமனை டிப்போவில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை பவானியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சங்ககிரியை அடுத்த ஊஞ்சக்கொரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரி ஒன்று பவானி செல்லும் சாலையில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் திடீரென குறுக்கே சென்ற போது எதிரே வந்த கிரேன் லாரி குறுக்கே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க அருகில் இருந்த குறுக்கு சாலையில் புகுந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக கிரேன் லாரி அரசு பேருந்தின் பின்பகுதியில் பலமாக மோதி விபத்தானது. இந்த விபத்தில் பேருந்தின் பின்பகுதி சேதம் அடைந்ததோடு . பேருந்தில் பயணம் செய்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் (40), படைவீடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (48), சிமெண்ட்பேக்டரி பகுதியைச் சேர்ந்த அமுதா (50), சங்ககிரி வி.என்.பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (68) உட்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணங்களில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். மேலும் இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் கிரேன் லாரி ஓட்டுனரான திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சந்திரன் (27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்போதிகள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Similar News