41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் நமது கொங்கு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பேட்டி

கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் நமது கொங்கு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பேட்டி;

Update: 2025-09-30 03:09 GMT
தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் நமது கொங்கு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பேட்டி நமது கொங்கு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் தங்கவேலு, காங்கேயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடைபெறும் போது கட்சித் தலைவர் பேசுவதற்கு முன் தொண்டர்களுக்கும்,தலைவர்களுக்கும் தேவையான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும். கரூரில் நடைபெற்ற துயர சம்பவத் திற்கு அரசு மற்றும் போலீசார் முழு பொறுப்பேற்க வேண்டும். அரசியல் கட்சிக் கூட்டம் நடத்த, கட்சியினர் கேட்கும் இடத்தை கொடுக்காமல் மாற்றி இடத்தை கொடுப்பது ஏன்? அரசியல் கட்சியின் கூட்டத்தை பொறுத்து இடம் ஒதுக்க வேண்டும், கூட்டம் அதிகமானால் போலீசாரும், பொறுப்பாளர்களும் இணைந்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை சரி செய்ய வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களும் பொதுக்கூட்டங்களுக்கு வர போலீசார் அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News