41,250 பக்க இறுதி அறிக்கை கோர்ட்டில் தாக்கல்

தாக்கல்;

Update: 2025-02-08 03:10 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். அதைத் தொடர்ந்து, ஜூலை 17ல் நடந்த போராட்டம், கலவரமாக மாறியது. கலவரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பள்ளி வளாகத்தில் பொருட்களை சூறையாடி திருடியது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது, பசு மாடுகளை துன்புறுத்தியது, சின்ன சேலத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட போலீசாரை கல்வீசி தாக்கியது என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சென்னை சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி., பிரவீன்குமார் அபினவ் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் அம்மாதுரை, ரவிச்சந்திரன், அண்ணாதுரை ஆகியோர் கொண்ட சிறப்பு புனாய்வுக் குழு போலீசார் விசாரித்தனர். பள்ளி கலவரம் தொடர்பாக பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தாய்மாமன் செந்தில்முருகுன் மற்றும் 53 சிறார்கள் உட்பட 916 பேர் மீது வழக்குப் பதிந்து, 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.அதில், பள்ளி வளாக கலவர வழக்கில் 666 பேர் மீதான விசாரணைக்கு 21 ஆயிரம் பக்கங்கள். போலீஸ் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய வழக்கில் 124 பேர் மீது விசாரணைக்கு 10 ஆயிரம் பக்கங்கள். பசுமாடுகளை துன்புறுத்திய வழக்கில் 5 பேர் மீதான விசாரணைக்கு 150 பக்கங்கள். சின்னசேலத்தில் காவல் துறை அதிகாரிகளை கல்வீசி தாக்கிய வழக்கில் 121 பேர் மீது 9,000 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 53 சிறார்கள் மீதான வழக்கில், விழுப்புரம் கோர்ட்டில் 1,100 பக்கத்திற்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கனியாமூர் கலவரம் தொடர்பாக 4 வழக்குகளில், 53 சிறார்கள் உட்பட மொத்தம் 916 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு 41 ஆயிரத்து 250 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Similar News