முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 41,330 மாணவ மாணவியர்கள் பயன்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 41,330 மாணவ, மாணவியர்கள் பயன் - ஆட்சியர் ச.உமா தகவல்

Update: 2023-12-12 17:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை. ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில் 41 பள்ளிகளில் பயிலும் 1,588 மாணவ, மாணவியர்கள், நாமக்கல் நகராட்சியில் உள்ள 17 பள்ளிகளில் பயிலும் 2,205 மாணவ, மாணவியர்கள், திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 12 பள்ளிகளில் பயிலும் 1,792 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 70 பள்ளிகளில் பயிலும் 5,585 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வந்தனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பெரும்பாலான பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ரூ.404.41 கோடி செலவில் 31,008 பள்ளிகளில் பயிலும் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் 25.08.2023 அன்று உணவு பரிமாறி, அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார்.நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 673 பள்ளிகளில் பயிலும் 27,128 மாணவ, மாணவியர்கள், 15 பேரூராட்சிகளில் உள்ள 59 பள்ளிகளில் பயிலும் 3,751 மாணவ, மாணவியர்கள், 3 நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளில் உள்ள 40 பள்ளிகளில் பயிலும் 4,665 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 772 பள்ளிகளில் பயிலும் 35,544 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 842 பள்ளிகளில் பயிலும் 41,330 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News