414 வது நாளாக மதிய உணவு வழங்கும் சமூக ஆர்வலர்.
மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரம் நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.;
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவருடன் இருக்கும் காப்பாளர்களுக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக தினமும் 1000 பேருக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் 414-வது நாளான இன்று (27/04/2025) ஞாயிற்றுக்கிழமை அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களின் தலைமையில், தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி., மாநில ஆணைய உறுப்பினர் ஆனந்தராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவு, பழங்கள், குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். அருகில் வழக்கறிஞர் முத்துக்குமார் உள்பட பலர் உள்ளனர்.