42 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் 2000 டன் நெல் மூட்டைகள் திருப்பூர் பயணம்
மயிலாடுதுறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மூலம் 2000 டன் நெல் மூட்டைகள் அரிசி அரவைக்காக திருப்பூருக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது
. மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள் நிலையங்களிலிருந்துநெல் மூட்டைகள்கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் சித்தர்காடு, எருக்கூர், எடமணல், ஆக்கூர், மாணிக்கப்பங்கு ஆகிய இடங்களில் உள்ள நெல்கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகளை அரவைக்காக மயிலாடுதுறை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு தனியார் மற்றும் அரசு நவீன அரிசி ஆலைகளுக்கு லாரி மற்றும் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். நெல் மூட்டைகள் அரிசியாக்கப்பட்டு மீண்டும் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு வந்து ரேஷன் கடை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியாக விநியோகிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று மயிலாடுதுறை சித்தர்காடு நவீன அரிசி ஆலை கிடங்கிலிருந்து 2000 டன் எடை கொண்ட 50ஆயிரம் நெல் மூட்டைகள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் ஏற்றப்பட்டு திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகள் ஏற்றப்படும் இடத்தில் அரசு அதிகாரிகள் நெல்லின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்