திருமழிசையில் ரூ.4.20 லட்சத்தில் தகனமேடை சீரமைப்பு
Update: 2023-12-18 08:31 GMT
தகன மேடை
திருமழிசை பேரூராட்சி 9வது வார்டுக்குட்பட்ட பிரையாம்பத்து பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனமேடை சேதமடைந்து பரிதாப நிலையில் இருந்தது. இதனால் இறந்தவர்களை எரியூட்ட முடியாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து சென்னை பல்லவ ரோட்டரி சங்கம் சார்பில் 4.20 லட்சம் ரூபாய் மதிப்பில் தகனமேடை சீரமைக்கப்பட்டு பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட தகனமேடை நேற்று திருமழிசை பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் சென்னை ரோட்டரி சங்கத்தினர் ஒப்படைத்தனர். இதேபோல் மடவிளாகம், அயத்துார் காலனி, சிறுகடல் ஆகிய பகுதிகளிலும் சுடுகாடு தகனமேடை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது என ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்தனர்.