தர்மபுரி தொகுதியில் 43 பேர் வேட்புமனு தாக்கல்

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் இதுவரை பிரபல அரசியல் கட்சிகள் உட்பட சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 43 நபர்கள் வேட்பு மனு தாக்கல்

Update: 2024-03-27 17:15 GMT
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் செளமியா அன்புமணி, அதிமுக சார்பில் டாக்டர் அசோகன்,திமுக சார்பில் வேட்பாளர் ஆ மணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று காரிமங்கலம் பகுதியை சேர்ந்த சௌமியா என்ற இளம் பெண் சுயேட்சை வேட்பாளராக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேட்சையாக மணி பெயர் கொண்ட இரண்டு நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிந்த நிலையில்,தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 43 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News