ரூ4.37 கோடி மதிப்பீட்டில் கவரப்பாளையம்- வரதராஜன் பேட்டை இருவழிச்சாலை திட்டப்பணி ஜெயங்கொண்டம் எம் எல் ஏ துவக்கி வைத்தார்
கவரப்பாளையம்- வரதராஜன் பேட்டை வரை ரூ4.37 கோடி மதிப்பீட்டில் இருவழிச்சாலை திட்டப் பணி ஜெயங்கொண்டம் எம் எல் ஏ துவக்கி வைத்தார்
ஜெயங்கொண்டம் டிச.28- ஆண்டிமடம் ஒன்றியம் கவரப்பாளையத்தில் இருந்து வரதராஜன் பேட்டை வரை ரூ 4.37 கோடி மதிப்பீட்டில் ஒரு வழித்தடத்திலிருந்து இரு வழி தட சாலையாக மாற்றும் பணியை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஆண்டிமடம் ஒன்றியம், கவரப்பாளையத்தில்,ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024 - 2025 ன் கீழ், கவரப்பாளையம் முதல் வரதராஜன்பேட்டை வரை செல்லும் தார்சாலையை,ரூ 4.37 கோடி மதிப்பீட்டில், ஒருவழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிபடுத்தும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் மனோகரன், ராஜா, உதவி பொறியாளர் அகிலா, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், வரதராஜன்பேட்டை பேரூர் கழக செயலாளர் அல்போன்ஸ், ஒன்றிய குழு உறுப்பினர் பத்மநாபன் மற்றும் ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்,வரதராஜன்பேட்டை பேரூர் கழக நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.