சேலம் மாவட்டத்தில் 44 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

சேலம் மாவட்டத்தில் 44 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Update: 2024-05-10 13:05 GMT

சேலம் மாவட்டத்தில் 44 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


சேலம் மாவட்டத்தில் 296 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 44 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 3 பள்ளிகளும், தனியார் பள்ளிகள் 88 பள்ளிகளும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஒரு பள்ளியும் என மொத்தம் 136 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் அரசு பள்ளிகள் 89.64 சதவீதமும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 89.90 சதவீதமும், தனியார் பள்ளிகள் 97.10 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகள் 88.31 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது .ஆனால் இந்த ஆண்டு 1.33 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று 89.64 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டத்தில் மாணவிகள் 94.52 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர்கள் 87.79 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாணவர்களை விட மாணவிகள் 6.73 சதவீதம் கூடுதல் தேர்ச்சி ஆகும்.
Tags:    

Similar News