45.6 கோடி மதிப்பீட்டில் சாலை அகலபடுத்தும் பணியினை அமைச்சர் தொடங்கிவைப்பு
அரியலூர் மாவட்டம் மருவத்தூர் முதல் பொன்பரப்பி வரை சாலையை அகலபடுத்தும் பணியினை 45.6 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
Update: 2024-02-05 10:56 GMT
அரியலூர் மாவட்டம் மருவத்தூர் முதல் பொன்பரப்பி வரை 06 கிலோமீட்டர் நீளத்திற்கு இருவழிதடத்தினை நான்குவழி தடமாக சாலையை அகலபடுத்தும் பணியினை 45.6 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு சாலை அகலபடுத்தும் பணியினை தொடங்கி வைத்தனர்.
மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் நெடுஞ்சாலைதுறை உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.