திருப்பூர் மாவட்டத்தில் நாளை குரூப்4 தேர்வில் 45,885 பேர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டத்தில் நாளை குரூப் 4 தேர்வு 45885 பேர் எழுதுகிறார்கள். 9 மணிக்கு மேல் வருகிறவர்களுக்கு அனுமதி வழங்கபடாது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை குரூப் 4 தேர்வை 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள்.9 மணிக்கு மேல் வருகிறவர்களுக்கு அனுமதி இல்லை திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.
இதனை 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள். 9 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக்கு வருகிறவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் எழுதும் மிக முக்கிய போட்டித்தேர்வாக உள்ள குரூப் 4 தேர்வு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்தது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை 45 ஆயிரத்து 885 பேர் எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் 45 மொபைல் டீம் மற்றும் 18 பறக்கும் படையினர், 155 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்வு மையங்களில் பணியாற்றுகிறவர்களுடனான ஆலோசனை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் குமரேசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:& தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக்கு வருகிறவர்களுக்கு அனுமதி கிடையாது. காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு வரை நடைபெறும். அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோக கவரேஜ் கட்டாயம் இருக்க வேண்டும்.
மொபைல் டீம் உரிய நேரத்தில் வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். தேர்வாணைய விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எந்த ஒரு பிரச்சினையும் இன்றி நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.