500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாணவி சாதனை

ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிதர்ஷினி 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2024-05-11 01:08 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் 10-வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். ராசிபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வரும் விக்னேஸ்வரமூர்த்தி, சந்தான லட்சுமி ஆகியோரின் மகள் வி.ஹரிதர்ஷினி. ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். வெள்ளிக்கிழமை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவி ஹரிதர்ஷினி 498 மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளார். பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 99, ஆங்கிலம்- 99, கணிதம்-100, அறிவியல் -100, சமூக அறிவியல்- 100. இதேபோல், இப்பள்ளி மாணவி பி.பவதன்யா 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை பாபு இருசக்கர வாகன மெக்கானிக்காக உள்ளார். இவரது பாடவாரியான மதிப்பெண்கள் விவரம்: தமிழ்- 99, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல் -99, சமூக அறிவியல்-100.

மேலும், இதே பள்ளியில் படித்த ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் இளங்கோ, புவனேஸ்வரி ஆகியோரின் மகள் இ.பி.தனிஷ்காவும் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரின் பாடவாரி மதிப்பெண்கள் விவரம்: தமிழ்- 98, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல் -100, சமூக அறிவியல்-100. இதே போல் பள்ளியின் மாணவி ஏ.எஸ்.சுபிக்ஷா 489 மதிப்பெண்கள் பெற்றார். பள்ளியில் தேர்வு எழுதிய 101 மாணவ மாணவியர்களில் 450-க்கும் மேல் 29 பேரும், 400-க்கும் மேல் 68 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதபாடத்தில் 19 பேரும், அறிவியல் பாடத்தில் 2 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் 100-க்கு 100 மதிபெண்கள் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்கள் பள்ளியின் தலைவர் என்ஜினியர் என்.மாணிக்கம், செயலர் வி.சுந்தரராஜன், பொருளாளர் வி.ராமதாஸ், கல்விக்குழுத் தலைவர் டி.நடராஜூ, நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.எம்.கிருஷ்ணன், சிபிஎஸ்சி., பள்ளி சேர்மேன் டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.பெத்தண்ணன், இணைச்செயலர் ஆர்.பாலகிருஷ்ணன், கல்வியியல் கல்லூரிச் சேர்மேன் கே.குமாரசாமி, அறக்கட்டளை செயலர் எஸ்.சந்திரசேகர், பள்ளி முதல்வர் வி.கிருஷ்ணமூர்த்தி, பொறுப்பாசிரியர் வெண்ணிலா உள்ளிட்டோர் பாராட்டி நினைவு பரிசளித்து பாராட்டினர்.

Tags:    

Similar News