தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் 4-வது மாவட்ட மாநாடு.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் 4-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் 4வது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் சீவகன் தலைமையில் மத்திய செயற்குழு உறுப்பினர் இளையராஜா முன்னிலையில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் வரவேற்பில் டிசம்பர் - 9ம் தேதி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்த குமார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர். இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கைகள் பெரம்பலூர் நகராட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு நகராட்சிக்கான வீட்டு வாடகைபடி வழங்கிடவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் பணிபுரியும் அனைவருக்கும் வட்ட அளவிலான வீட்டு வாடகை படி வழங்க கோரியும்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரியும், பணியாளர் குறைப்பு செய்வதை தவிர்த்து அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பக் கோரியும், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கி ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கவும் , இரவு காவலர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். மேலும் மாநிலக் குழுவின் முடிவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் டிசம்பர் 21ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் வேற்றப்பட்டன. இந்த மாவட்ட மாநாட்டில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.